டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணியின் முக்கிய வீரருக்கு காயம்; தொடரிலிருந்து விலகல்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவை நெருங்கிவிட்டது. இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
அதன்படி நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதவுள்ளன. மேலும் இரு அணிகளும் இதுநாள் வரை டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற காரணமாக இருந்த டேவன் கான்வே, காயம் காரணமாக இறுதிப்போட்டி மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் போது ஆட்டமிழந்த விரக்த்தியில் தனது பேட்டினை கான்வே கையால் குத்தினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டத்தை அடுத்து, மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
Also Read: T20 World Cup 2021
அங்கு மேற்கொள்ளபட்ட் ஸ்கேன் பரிசோதனையில் கைமுறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து டி20 உலகக்கோப்பை, இந்திய தொடர் ஆகியவற்றிலிருந்து டேவன் கான்வே விலகினார். மேலும் அவருக்கு மாற்றுவீரரையும் பெறமுடியாத இக்கட்டான சூழலில் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.