நான் ஆல் ரவுண்டர் கிடையாது - ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: Tue, Jul 05 2022 19:51 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, கடந்தாண்டு கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் ஜூலை 1ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. 

இப்போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி கடைசி டெஸ்டில் தோற்தால் தொடர் சமநிலைக்கு வந்தது. அதேசமயம் மெக்குல்லம் -பென் ஸ்டோக்ஸ் கூட்டணி அதிரடியாக விளையாடி வெற்றியை குவித்து வருகிறது. 

ஆனாலும் இப்போட்டிகான இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டிருந்தார். இந்தத் தொடரில் பும்ரா பந்து வீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிராட் வீசிய ஒரு ஓவரில் 35 ரன்களை எடுத்து உலக சாதனைப் படைத்தார். 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட்டுகளையும் எடுத்தார். இதனால் புதிய ஆலரவுண்டர் உருவாகிவிட்டாரா என போட்டி முடிவுக்கு பின் பும்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த பும்ரா, “என்னை ஆல்ரவுண்டர் என்று சொல்ல முடியாது. 3ஆம் நாள் நாங்கள் நன்றாக விளையாடினோம். நேற்று ஒரு நாள் பேட்டிங் ஒழுங்காக விளையாடாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரசியமே அதுதான். முதல் நாள் மழை வராமல் இருந்திருந்தால் நாங்கள் ஆட்டத்தை வென்றிருப்போம். 

இங்கிலாந்து சிறப்பாக விளையாடினார்கள். இரண்டு கிரிக்கெட் அணிகளும் நன்றாக விளையாடியது. அதனால் தொடரும் சமநிலையில் முடிந்தது மகிழ்ச்சியே. கேப்டனாக பொறுப்பேற்று விளையாடியது சவாலாகவும் கௌரவமாகவும் இருந்தது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை