‘என்னையவா டீம்ல எடுக்கல’ அதிரடியில் பதிலடி கொடுத்த டூ பிளெசிஸ்!

Updated: Sat, Sep 11 2021 21:26 IST
Image Source: Google

சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 25ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஆண்ட்ரே ஃபிளட்சர் ரன் ஏதுமின்றியும், மார்க் டியால் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் டூ பிளெசிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். பின் இப்போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டூ பிளெசிஸ் 84 ரன்களில் அட்டமிழந்தார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அவரைத் தொடர்ந்து வந்த டிம் டேவிட் தனது பங்கிற்கு 34 ரன்களையும், கீமா பால் 22 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. பார்போடாஸ் அணி தரப்பில் முகமது அமீர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை