சிபிஎல் 2021: நைட் ரைடர்ஸை வீழ்த்தி அமேசன் வாரியர்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Thu, Aug 26 2021 23:44 IST
Image Source: Google

சிபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி - கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. 

அதன்படி களமிறங்கிய கயானா அணி ஷிம்ரான் ஹெட்மையரின் பொறுப்பான ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 54 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி வீரர்கள் சிம்மன்ஸ், சுனில் நரைன், செய்ஃபெர்ட், பிராவோ, பொல்லார்ட் ஆகியோர் எதிரணி பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் கயானா அமேசன் வாரியார்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::