சிபிஎல் 2021: பூரன் அதிரடியில் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Sun, Sep 12 2021 09:35 IST
Image Source: Google

சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வாரியஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

அதில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வாரியர்ஸ் அணி 169 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பூரன் 75 ரன்களைச் சேர்த்தார். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால் 19.1 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் வாரியர்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தலாவாஸ் அணியை வீழ்த்தி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை