சிபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அபார வெற்றி!

Updated: Sun, Aug 29 2021 23:22 IST
Image Source: Google

சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய கிங்ஸ் அணிக்கு ரகீம் கார்ன்வால் - ஆண்ட்ரே பிளெட்சர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. அதன்பின் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 43 ரன்களை குவித்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரபிப்பில் ரவி ராம்பால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய நைட் ரைடர்ஸ் அணியில் சிம்மன்ஸ் 25, வெப்ஸ்டர் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் காலின் முன்ரோவுடன் ஜோடி சேர்ந்த டிம் செய்ஃபெர்ட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

ஆனால் மறுமுனையில் காலின் முன்றோ எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார். இதனால் ஆட்டத்தின் கடைசி பந்தில் நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற 6 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

அதனை எதிர்கொண்ட செய்ஃபெர்ட் பந்தை தவறவிட்டார். இதன் மூலம் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை