சிபிஎல் 2021 : சதமடித்து மாஸ் காடியா ஃபாஃப்; இமாலய இலக்கை நிரணயித்தது கிங்ஸ்!

Updated: Sat, Sep 04 2021 21:20 IST
Image Source: Google

சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 15ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஆண்ட்ரே ஃபிளட்சர் இணை தொடக்கம் தந்தது. இதில் அதிரடியாக விளையாடிய ஃபிளட்சர் 23 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த கிரோன் காட்டோயும் 10 ரன்களில் வெளியேறினார். 

இதையடுத்து டூ பிளெசிஸுடன் ஜோடி சேர்ந்து விளையாடி ரோஸ்டன் சேஸ் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் வானவேடிக்கை காட்டி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் சிபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் அதிரடியில் வெளுத்து வாங்கியா ரோஸ்டன் சேஸ் 27 பந்துகளில் அரைசதமடிக்க அணியின் ஸ்கோர் 200-ஐத் தாண்டியது. பின் 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 224 ரன்களைச் சேர்த்தது.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபஃப் டூ பிளெசிஸ் 120 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 64 ரன்களையும் சேர்த்தனர். பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் ஃபாபியன் ஆலன், ஃபாவத் அஹ்மத் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::