சிபிஎல் 2021: லூயிஸ் சதத்தில் நைட் ரைடர்ஸை வீழ்த்திய பேட்ரியாட்ஸ்!

Updated: Sun, Sep 12 2021 14:08 IST
CPL 2021:Lewis ton seals Patriots' semis berth (Image Source: Google)

சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக காலின் முன்ரோ 47 ரன்களையும், சுனில் நரைன் 33 ரன்களையும் சேர்த்தனர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு கிறிஸ் கெயில் - எவின் லூயீஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் 35 ரன்களில் கெயில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த எவின் லூயீஸ் சதமடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இதன்மூலம் 14.4 ஓவர்களிலேயே பேட்ரியாட்ஸ் அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எவின் லூயீஸ் 52 பந்துகளில் 5 பவுண்டரி, 11 சிக்சர்களை விளாசி 102 ரன்களைச் சேர்த்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை