வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ர லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

Advertisement

அந்த படி விளையாடிய அந்த அணியில் தொடக்க வீரர் மார்க் டியால் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பாஃப் டூ பிளெசிஸ் - நிரோஷன் டிக்வெல்லா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் டிக்வெல்ல 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் சதமடித்து அசத்தினார். இதனால் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசிய கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் டூ பிளெசிஸ் 103 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து இலக்கை துரத்திய கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கும் ரஹ்மனுல்லா குர்பாஸ் - சந்திரபால் ஹேம்ராஜ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். பின் ஹேம்ராஜ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் குர்பாஸுடன் ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப்பும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

Advertisement

இதன்மூலம் 19.2 ஓவர்களில் கயானா அமேசன் வாரியர்ஸ் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News