வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணியில் பிராண்டன் கிங்ஸ், கென்னர் லூயிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷமாரா ப்ரூக்ஸ் - ரோவ்மன் பாவெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய ஷமாரா ப்ரூக்ஸ் சதமடித்ததுடன், 52 பந்துகளில் 8 சிக்சர், 7 பவுண்டரிகள் என 109 ரன்களைச் சேர்த்தார்.

இறுதியில் இமாத் வாசிம் 15 பந்துகளில்ல் 3 சிக்சர், 4 பவுண்டரிகள் என 41 ரன்களை விளாசி அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜமைக்கா தலாவாஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களைச் சேர்த்து அசத்தியது.

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கயானா அமேசன் வாரியர்ஸ் அணியில் பால் ஸ்டிர்லிங் 2 ரன்களிலும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 22, ஷாய் ஹோப் 31 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன், ஹெட்மையர், ஷெஃபெர்ட் என அதிரடி வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் தனி ஆளாக போராடிய கிமோ பால் அரைசதம் கடந்து, 57 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

இறுதியில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஜமைக்கா தலாவாஸ் அணி 37 ரன்கள் விட்த்தியாசத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், சிபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News