IND vs SL: இருமுறை சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை!

Updated: Thu, Jan 06 2022 19:15 IST
Image Source: Google

இலங்கை கிரிக்கெட் வாரியன் இன்று இலங்கை அணியின் 2022ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அணி இந்த வருடம் 8 டெஸ்டுகளில் விளையாடுகிறது. 

ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்கின்றன. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. 

பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ முன்பே வெளியிட்டது.

மேலும் டிசம்பர் 2022 - ஜனவரி 2023 மாதங்களில் இந்தியாவுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் செய்கிறது இலங்கை அணி. இதன் அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் இலங்கை அணி டிசம்பரில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 அல்லது 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை