மகளிர் அணியின் தலைமை தேர்வாளராக நீது டேவிட் நியமனம்!

Updated: Tue, Jun 20 2023 12:55 IST
Image Source: Google

ஆடவர் கிரிக்கெட்டைப் போன்று மகளிர் கிரிக்கெட்டிற்கும் பிசிசிஐ அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சமீபத்தில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, மகளிர் கிரிக்கெட் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வுக் குழுவின் நியமனங்களை பிசிசிஐ அறிவித்தது. 

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தலைமை தேர்வாளராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். நீது டேவிட் தவிர, பெண்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களாக ரேணு மார்கரெட், ஆர்த்தி வைத்யா, கல்பனா வெங்கடாச்சார், ஷ்யாமா டி ஷா ஆகியோரையும் பிசிசிஐ நியமித்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் நியமனத்தின் போது இந்த குழு ஒன்றாக இணைந்து முடிவு எடுப்பார்கள்.

கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் நீது டேவிட் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடிய, 10 டெஸ்ட் போட்டிகளிள் 25 ரன்களும், 41 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 97 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 74 ரன்களும், 141 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

ஜூனியர் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தலைமை தேர்வாளராக விஎஸ் திலக் நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர, ராந்தேவ் போஸ், ஹர்விந்தர் சிங் சோதி, பதிக் படேல், கிருஷ்ண மோகன் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களது தலைமையிலான குழு தான் ஒன்றாக இணைந்து தான் வீராங்கனைகளை தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை