நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் சந்தீப் லமிச்சானே. சுழற்பந்து வீச்சாளராக சிறப்புடன் விளையாடிய சந்தீப் மீது கவுசாலா காவல் துறையிடம் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பாலியல் வன்கொடுமை புகார் கூறினார்.

Advertisement

கடந்த ஆகஸ்டு 21ஆம் தேதி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புகார் அளித்த 2 நாட்களுக்கு பின் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதே நாளில் அவரை நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. 

Advertisement

இதன்பின், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி காலை காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சந்தீப், உடனடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றவர்.

இந்நிலையில், நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பின் கூட்டம் பொக்காரா நகரில் நேற்று இரவு நடந்தது. இதில், சந்தீப் லமிச்சானே மீது பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குவது என முடிவானது. அதுபற்றி இன்று முடிவு அறிவிக்கப்படும் என கூட்டமைப்பு அதிகாரி பிரேந்திரா பகதூர் சந்தா கூறியுள்ளார்.

இந்த சூழலில், சந்தீப்பை ஜாமீனில் விடுவது என்ற பதான் ஐகோர்ட்டு முடிவுக்கு எதிராக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவானது. அரசு வழக்கறிஞர் சார்பில் தாக்கலான மனுவில், பாலியல் வன்கொடுமை குற்றவாளியான கிரிக்கெட் வீரர் சந்தீப் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News