BANW vs INDW: இந்திய மகளிர் ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு!

Updated: Mon, Jul 03 2023 13:28 IST
Cricket: Uma, Rashi, Anusha Earn Call-Ups, No Place For Renuka, Richa, Shikha In India’s Squads For (Image Source: Google)

இந்திய மகளிர் அணி வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. 6 போட்டிகளும் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்மிருதி மந்தனா இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் பேட்டர் ரிச்சா கோஷ் ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளனர்.இதனால் இந்திய அணி அனுபவமில்லாத பந்து வீச்சாளர்களுடன் விளையாட உள்ளது.

இந்திய டி20 அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே),ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா , ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், மேகனா, மேகனா பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பாரெட்டி, மின்னு மணி.

இந்திய ஒருநாள் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா , ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி ,அமன்ஜோத் கவுர், பிரியா புனியா, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பரெட்டி, ஸ்னே ராணா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை