சாதனைப் படைத்த சந்திரயான்..! வாழ்த்துகளை தெரிவித்த இந்திய வீரர்கள்..!

Updated: Wed, Aug 23 2023 20:20 IST
சாதனைப் படைத்த சந்திரயான்..! வாழ்த்துகளை தெரிவித்த இந்திய வீரர்கள்..! (Image Source: Google)

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது. அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. 

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதால், புதிய இந்தியா உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சந்திரயான் 3 வெற்றியை இந்தியார்கள் அனைவரும் கொண்டாடிவருகின்றனர். அதன் ஒருபகுதியாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோர் தங்களது சமூகவலைதள பக்கங்களில் இஸ்ரோவிற்கு, இத்திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ராஜீவ் சுக்லா, முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் ஆகியோரும் தங்களது வாழ்த்துகளை பதிவுசெய்துள்ளனர். மேலும் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி அங்கு இந்நிகழ்வை தொலைக்காட்சி வாயிலாக காணும் காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதற்கான ட்விட்டர் இணைப்புகள் உங்களுக்காக இதோ...

 

 

 

 

 

 

 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை