தென் ஆப்பிரிக்க டி20 லீக்: ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் முழு விபரம்!

Updated: Tue, Sep 20 2022 22:53 IST
CSA20 auction: Final list of players of all 6 teams at CSA T20 League (Image Source: Google)

இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் லீக் தொடரை போலவே தென் ஆப்பிரிக்காவிலும் இந்த லீக் தொடர் நடைபெற உள்ளது. இதனை அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்துள்ளது. இந்த லீக் தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகளையும், ஆறு ஐபிஎல் அணி நிர்வாகங்கள்தான் வாங்கியுள்ளன. அதனால் உலக அளவில் இது மினி ஐபிஎல் தொடர் எனவும் அறியப்படுகிறது.

கிரிக்கெட் களத்தில் பிரீமியர் லீக் தொடர்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருவதும், அதற்கு கிடைத்துள்ள வரவேற்பும், அதற்கு பின்னால் உள்ள வணிகமும் தான் இந்த தொடர் தொடங்கப்பட காரணமாக அமைந்துள்ளது.

சென்னை அணி நிர்வாகம் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியையும், டெல்லி அணி நிர்வாகம் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியையும், லக்னோ அணி நிர்வாகம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியையும், மும்பை அணி நிர்வாகம் எம்ஐ கேப்டவுன் அணியையும், ஹைதராபாத் அணி நிர்வாகம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியையும் வாங்கியுள்ன. 

மேலும் இந்த ஆறு அணிகளும் தங்ளது அணியின் பயிற்சியாளர்களை நியமித்துள்ளன. இந்நிலையில், இந்த லீகின் முதல் சீசனுக்கான ஏலம் அண்மையில் நடந்தது. அதன்படி இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தேர்வு செய்துள்ள வீரர்களின் முழு விபரத்தையும் இப்பதிவில் காண்போம்.

ஜோகர்னஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ்: ஃபாஃப் டூ பிளேசிஸ் (கேப்டன்), ஜெரால்ட், மஹிஷ் தீக்ஷனா, ரொமாரியோ ஷெப்பர்ட், ஹாரி ப்ரூக்ஸ், ஜென்மான் மலான், கைல் வெர்ரைன், ஜார்ஜ் கார்டன், அல்சாரி ஜோசப், லியுஸ் டுப்ளூய், லூயிஸ் கிரிகோரி, லிசாட் வில்லியம்ஸ், டொனாவன் ஃபெரீரா, நந்த்ரே பர்கர், மலுசி சிபோடோ, காலேப் செலேகா.

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: ஐடன் மார்க்ரம், ஒட்னீல் பார்ட்மேன், மார்கோ ஜான்சன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சிசண்டா மாகலா, ஜுனைட் தாவூத், மேசன் கிரேன், ஜான்-ஜான் ஸ்மட்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஆடம் ரோசிங்டன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, மார்க்வெஸ் அக்கர்மேன், ஜேம்ஸ் ஃபுல்லர், பி. சரேல் எர்வீ, அயா ககமனே, டாம் அபெல்.

பார்ல் ராயல்ஸ்: டேவிட் மில்லர், கார்பின் போஷ், ஜோஸ் பட்லர், ஓபேட் மெக்காய், லுங்கி இங்கிடி, ஷம்சி, ஜேசன் ராய், டேன் விலாஸ், ஜார்ன் ஃபோர்டுயின், விஹான் லுபே, ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், இம்ரான் மனாக், இவான் ஜோன்ஸ், ரமோன் சிம்மன்ஸ், மிட்செல், இவான் ப்யூரின், இமோவின் மோர்கன், கோடி யூசுப்.

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: டி காக், ப்ரீனெலன் சுப்ரயன், ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ், ரீஸ் டாப்லி, டுவைன் பிரிட்டோரியஸ், ஹென்ரிச் கிளாசென், கீமோ பால், கேசவ் மகாராஜ், கைல் அபாட், ஜூனியர் டாலா, தில்ஷன் மதுஷங்க, கிறிஸ்ட் ஜான்சன் பிரெட்ஸன், மாட்சன் பிரெட்ஸென்ட், மாட்சன் பிரெட்சன், கைல் மேயர்ஸ் வியான் முல்டர், சைமன் ஹார்மர்.

எம்ஐ கேப் டவுன்: ககிசோ ரபாடா, டெவால்ட் ப்ராவிஸ், ரஷித் கான், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், வான்டர் டசன், ரியான் ரிக்கல்டன், ஜார்ஜ் லிண்டே, பியூரன் ஹென்ரிக்ஸ், டுவான் ஜான்சன், டெலானோ போட்ஜீட்டர், கிராண்ட் ரோலோஃப்சென், ஓல்லி ஸ்டோன், வாக்கர், மார்ஷெல், ஜியாத் அபாரம்ஸ், ஒடியன் ஸ்மித்.

பிரிட்டோரியா கேபிடல்ஸ்: அன்ரிச் நார்க்யா, மைக்கேல் பிரிட்டோரியஸ், ரிலீ ரோசோவ், பில் சால்ட், வெய்ன் பார்னெல், ஜோஷ் லிட்டில், ஷான் வான் பெர்க், அடில் ரஷித், கேமரூன் டெல்போர்ட், வில் ஜாக்ஸ், டி ப்ரூயின், மார்கோ மரைஸ், குசல் மெண்டிஸ், டேரின் டுபாவில்லன், நீஷம், போஷ், ஷேன் டாட்ஸ்வெல்.

அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்

  • டிரிஸ்டன் ஸ்டப்ஸ்: 9.2 மில்லியன் ரேண்ட் - சன்ரைசர்ஸ்
  • ரிலீ ரோசோவ்: 6.9 மில்லியன் ரேண்ட் - கேபிடல்ஸ்
  • மார்கோ ஜான்சன்: 6.1 மில்லியன் ரேண்ட் - சன்ரைசர்ஸ்
  • வெய்ன் பார்னெல்: 5.6 மில்லியன் ரேண்ட் - கேபிடல்ஸ்
  • சிசண்டா மகலா: 5.4 மில்லியன் ரேண்ட் - சன்ரைசர்ஸ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை