நாங்கள் பந்து வீச்சில் என்ன தவறு செய்தோம் - எம் எஸ் தோனி!

Updated: Sun, Apr 30 2023 20:25 IST
Image Source: Google

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 41வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. 

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 42 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 40 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். 

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் தோனி, “நாங்கள் ஆட்டத்தின் நடுப்பகுதியில் ஆட்டத்தை தவற விட்டோம் என நினைக்கிறேன். முதலில் பந்தை எப்படி வீச வேண்டும், பேட்ஸ்மேன் எப்படி அதனை அடிப்பார் என்பதை புரிந்து கொண்டு நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும் .அதேபோன்று பேட்டிங்களும் நாங்கள் கூடுதலாக ஒரு பத்து ரன்கள் சேர்த்து இருக்க வேண்டும். ஏனென்றால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அனுபவம் இல்லாதவர்கள். இதனால் பேட்டிங்கில் தான் அதனை ஈடு செய்ய வேண்டும்.

ஆடுகளம் கொஞ்சம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது.மேலும் மெதுவாக பந்து வீசும் போது நல்ல பலனை கொடுத்தது. 200 ரன்கள் என்பது இங்கு சராசரியான ஸ்கோர்தான். ஆனால் நாங்கள் கடைசியில் இரண்டு ஓவர்களை மோசமாக வீசினோம். பதிரானா எப்போதும் போல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவரை தவிர மற்றவர்கள் கொஞ்சம் தவறு செய்து விட்டார்கள் என நினைக்கிறேன். நாங்கள் பந்து வீச்சில் என்ன தவறு செய்தோம். இதில் தவறு என்ன நடந்தது என்பது குறித்து யோசிக்க வேண்டும்” என்று தோனி கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை