எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என திட்டத்தை தயார் செய்து வருகிறது. மேலும் ஒவ்வொரு அணிக்கும் எந்த வீரர்களை தேர்ந்தெடுத்தால் அணியின் பலம் அதிகரிக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் , ஐபிஎல் தொடரில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த வீரரை தேர்ந்தெடுத்தால் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர்கள் பலர் அறிவுரை வழங்கி இருக்கின்றனர். குறிப்பாக டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டதால் அவருக்கு பதில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டரை சென்னை அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

Advertisement

இதனால் பென் ஸ்டோக்ஸ் அல்லது சாம்கரன் அல்லது ஜேசன் ஹோல்டர் போன்ற தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரை சென்னை அணி தேர்ந்தெடுக்கும் என ஒவ்வொருவரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் கடந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, சென்னை அணி சாம் காரன் மற்றும் மனிஷ் பாண்டே ஆகிய இரு வீரர்களையும் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ராபின் உத்தப்பா தெரிவித்ததாவது, “தற்போது சென்னை அணிக்கு டுவைன் பிராவோவின் இடத்தை நிரப்புவதற்கு தலை சிறந்த ஆல்ரவுண்டர் தேவை,மேலும் சென்னை அணிக்கு பேக்கப் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் தேவை, என்னை பொறுத்தவரையில் சென்னை அணி சாம் கரனை தேர்ந்தெடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது, ஏனென்றால் அவர் ஏற்கனவே சென்னை அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் சென்னை அணி நிச்சயம் அவரை தேர்ந்தெடுப்பதற்கு அதிக முயற்சி செய்யும்.

அதேபோன்று சென்னை அணிக்கு இந்திய மிடிலாடர் பேட்ஸ்மேன் தேவை என்பதால் மனிஷ் பாண்டேவை தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மணிஷ் பாண்டே ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் .மேலும் ஐபிஎல் தொடரில் சிறந்த அனுபவமுடைய மனிஷ் பாண்டே, சென்னை அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார். நிச்சயம் சென்னை அணி இந்த இரண்டு வீரர்களை தேர்வு செய்ய முயற்சி செய்யும். அப்படி ஒரு வேலை இவர்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் வேறொரு திட்டத்தை வைத்திருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News