ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் வாழ்வா சாவா லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் இப்ராஹிமுடன் ஜோடி சேர்ந்த செதிகுல்லா அடல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 22 ரன்களைச் சேர்த்த நிலையில் இப்ராஹிம் ஸத்ரான் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷாவும் 12 ரன்கள் மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் செதிகுல்லா அடல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

பின்னர் அடலுடன் இணைந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி நிதானமாக விளையாட இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 68 ரன்களை எட்டியது. அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட செதிகுல்லா அடல் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 85 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஹஸ்மதுல்லா ஷாஹிதி 20 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய முகமது நபி ஒரு ரன்னிலும், குல்பதின் நைப் 4 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ரஷித் கானும் தனது பங்கிற்கு 19 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்ட அஸ்மதுல்லா ஒமர்ஸாய் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களுடன் 67 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News