ZIM vs IRE: அயர்லாந்தின் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!

Updated: Fri, Aug 20 2021 12:34 IST
Curtis Campher receives maiden T20I call-up as Ireland name squad for Zimbabwe series (Image Source: Google)

அயர்லாந்து அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதவுள்ள கடைசி தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான அயர்லாந்தின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி கர்டிஸ் கேம்பர் அயர்லாந்து டி20 அணியில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். 

அயர்லாந்து டி 20 அணி: ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), மார்க் அதிர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டாக்ரெல், ஷேன் கெட்கேட், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, வில்லியம் மெக்ளின்டாக், கெவின் ஓ'பிரையன், நீல் ராக், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் வைட், கிரேக் யங்.

ஒருநாள் அணி: ஆண்ட்ரூ பால்பர்னி (கேப்), மார்க் அதிர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டாக்ரெல், கிரஹாம் கென்னடி, ஜோஷ் லிட்டில், ஆண்டி மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், நீல் ராக், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரேக் யங் .

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை