ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.

Advertisement

அதன்படி இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 3ஆவது போட்டியில் இலங்கை - ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்க - திமுத் கருணரத்னே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடருந்து சிறப்பாக செயல்பட்ட இருவரும் அரைசதம் கடக்க,இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் 57 ரன்களில் நிஷங்காவும் 52 ரன்களில் கருனரத்னேவும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - சதீரா இணையும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இவர்களும் இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 250 ரன்களைத் தாண்டியது. அதன்பின் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட மெண்டீஸ் 78 ரன்களிலும், சதீரா 73 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் தசுன் ஷனகா ஒரு ரன்னிலும், தனஞ்செயா 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதியில் அதிரடியாக விளையாடிய சாரித் அசலங்கா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச, அவருக்கு துணையாக வநிந்து ஹசரங்காவும் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசினார்.  

இதன்மூலம் 50ஆவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அசலங்கா 49 ரன்களையும், ஹசரங்கா 23 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் தரப்ப அலி நெசர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News