CWC 2023 Qualifiers: வெஸ்ட் இண்டீஸை திணறடித்த ஸ்காட்லாந்து!

Updated: Sat, Jul 01 2023 15:57 IST
Image Source: Google

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றுப்போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் சூப்பர் சிக்ஸ் சுற்றின் 3ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பியது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜான்சன் சார்லஸ், ஷமாரா ப்ரூக்ஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், பிராண்டன் கிங் 22 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 5 ரன்களிலும்,  கேப்டன் ஷாய் ஹோப் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் - ரொமாரியோ செஃபெர்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரொமாரியோ செஃபெர்ட் 36 ரன்களுக்கும், ஜேசன் ஹோல்டர் 45 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்காட்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பிராண்டன் மெக்முல்லன் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் சோல், மார்க் வாட், கிறிஸ் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை