ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகள் உடைக்கப்படுவதுடன், சில புதிய சாதனைகள் படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

அதில் மிக முக்கியமாக நடப்பு ஐபிஎல் தொடரில் நிச்சயம் ஏதேனும் ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கெற்ற வகையிலேயே தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களைக் குவித்து அசத்தியது. இருப்பினும் அந்த அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் 300 ரன்களை அடிக்கும் வாய்ப்பினை அந்த அணி தவறவிட்டது. 

Advertisement

இதனால் நிச்சயமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 300 ரன்களை நிச்சயமாக எட்டும் என்ற எதிர்பார்ப்புகளுள்ளன. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி 300 ரன்களை எட்டும் என்பதற்கான கணிப்பினை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார். மேலும் அவர் இதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். 

அந்தவகையில் அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒரு சின்ன கணிப்பு. ஏப்ரல் 17 ஆம் தேதி ஐபிஎல்லில் முதல் 300 ரன்களைப் பார்ப்போம். யாருக்குத் தெரியும், ஒருவேளை நான் அதைப் பார்க்க அங்கே இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார். டேல் ஸ்டெயினின் கணிப்பின் படி ஏப்ரல் 17ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

ஏற்கெனவே இதற்கு இவ்விரு அணிகளும் கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மோதிய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 277 ரன்களை குவித்திருந்தது.இதில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் 17 சிக்ஸர்களை பறக்கவிட்டனர். இந்நிலையில் தான் டேல் ஸ்டெயின் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News