டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரீ ஹிட் வேண்டும் - டேல் ஸ்டெயின்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது அந்நாட்டு வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸனை வெறுப்பேற்றும் வகையில் அவருக்கு பவுன்ஸராக வீசி பும்ரா தவறான செயலில் ஈடுபட்டார். அதாவது ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசுவதற்குப் பதிலாக வேண்டுமென்றே க்ரீஸுக்கு வெளியே காலை வைத்து நோ-பால் வீசி ஓவருக்கு தேவையான பந்துகளை அதிகப்படுத்தி பவுன்ஸராக வீசி ஆன்டர்ஸனை வெறுப்பேற்றினார்.
அதே செயலையும் தென் ஆப்பிரிக்கத் தொடரில் ஜேஸனுக்கு எதிராகவும் பும்ரா செயல்படுத்தினார்.
இதைச் சுட்டிக்காட்டியே டேல் ஸ்டெயின் நோ-பாலுக்கு ப்ரீ ஹிட் வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டேல் ஸ்டெயின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரீ ஹிட்டை அறிமுகப்படுத்த வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ஓவருக்கு 7 முதல் 8 பந்துகள் அல்லது சிலநேரங்களில் 9 பந்துகள் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயமாக இது உதவுமா.
டெய்லண்டர்கள் பேட்ஸ்மேன்கள் டாப்-கிளாஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் மிரட்டல்விடுக்கும் பந்துவீச்சை கடைசி நேரத்தில் எதிர்கொள்வது சிரமம். அதிலிருந்து ப்ரீ ஹிட் காப்பாற்றும். இதுபற்றி ஸ்வரஸ்யமாக விவாதிக்கலாம். டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாகச் செல்கிறது. பும்ரா “நன்றாகப்பந்துவீசி” 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ” எனத் தெரிவித்துள்ளார்.