விராட் கோலி இல்லைனா அது இந்திய அணிக்கு தான் ஆபாத்து - ஆடம் கில்கிறிஸ்ட்!

Updated: Sat, Jul 30 2022 19:05 IST
Image Source: Google

சமகால கிரிக்கெட்டின் முடி சூடா மன்னாக திகழ்ந்து வந்த விராட் கோலி, கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் மிக கடுமையான விமர்ச்சனங்களையும் விராட் கோலி எதிர்கொண்டு வருகிறார்.

இந்திய அணியின் அசைக்க முடியாக நம்பிக்கையாக திகழ்ந்து வந்த விராட் கோலிக்கு, இனி இந்திய அணியில் இடமே கொடுக்க கூடாது, அது இந்திய அணியை பலவீனப்படுத்தும் என முன்னாள் வீரர்கள் பலர் பகிரங்கமாக பேசி வருகின்றனர். பிசிசிஐயும் விராட் கோலிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

விண்டீஸ் அணிக்கு எதிரான நடப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்துள்ள விராட் கோலி, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரிலாவது தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

என்னதான் ரசிகர்கள் விராட் கோலியின் மீது முழு நம்பிக்கை வைத்து காத்திருந்தாலும், விராட் கோலிக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருந்து வரும் நிலையில், விராட் கோலியை நீக்கினால் அது இந்திய அணிக்கு நிச்சயம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கில்கிறிஸ்ட் பேசுகையில், “விராட் கோலியை தற்போது நீக்கினால் அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை கொடுக்கும். அவருக்கு ஓய்வு தேவைப்படும் என கருதுகிறேன், ஓய்விற்கு பிறகு விராட் கோலி பழையபடி விளையாடுவார் என நம்புகிறேன். அதிக அனுபவமுடைய விராட் கோலியை போன்ற ஒருவரை திடீரென நீக்குவது நிச்சயமாக இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். 

உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரை வெறும் ஒரு சில போட்டிகளை வைத்து முடிவு செய்துவிட முடியாது. இந்திய அணி தற்போது வலுவான அணியாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும், எப்படிப்பட்ட அணியாக இருந்தாலும் அவர்களை இந்திய அணியால் வீழ்த்த முடியும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை