டி20 உலகக்கோப்பையில் இவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் - டேனியல் வெட்டோரி!

Updated: Fri, Jun 10 2022 14:45 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி 20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு இந்திய அணி தான் உலக கோப்பையை வெல்லும் என்று பேசிப்பேசியே தகுதிச்சுற்று கூட முன்னேறாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது. 

ஆனால் இந்த முறை நிச்சயம் கோப்பையை விட்டுக் கொடுக்க கூடாது என்ற முனைப்பில் இருக்கும் இந்திய அணி தகுதியான வீரர்களை அணியில் இணைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தகுதியான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு, நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் உதவியாக இருந்தது.

இதில் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின், தினேஷ் கார்த்திக், உம்ரான் மாலிக், அர்ஷ்திப் சிங் போன்ற வீரர்களை நிச்சயம் இந்திய அணியில் தேர்வு செய்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் எந்த வீரர்கள் இந்திய அணிக்கு சரியான தேர்வாக இருப்பார்கள் என்று முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் (நடராஜன், முஹ்சீன் கான், அர்ஷ்திப் சிங்,கலீல் அஹமது) எந்த வீரர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என்ற விவாதம் ஒன்று நடைபெற்றது. 

அதில் பங்கேற்ற நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி, ஆஸ்திரேலியா மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு அர்ஷ்திப் சிங் மிகப் பெரும் பக்கபலமாக இருப்பார் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்த பேசிய டேனியல் வெட்டோரி,“ என்னைப் பொருத்தவரையில் மேல் கூறப்பட்ட வீரர்களில் அர்ஷ்தீப் தான் சிறந்த தேர்வாக இருப்பார், இவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிக சிறந்த முறையில் விளையாடியுள்ளார். இவரை போன்ற ஒரு வீரர் தான் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீச முடியும்.

 ஏனென்றால் ஆஸ்திரேலியா மைதானத்தில் விக்கெட் நன்றாகவே இருக்கும், இதனால் டெத் ஓவர்கள் அங்கு மிகவும் முக்கியம், அதில் மட்டும் சிறப்பாக செயல்பட்டு விட்டால் நிச்சயம் வெற்றிதான், மற்றவர்களை விட அதை செய்வதில் அர்ஷ்திப் சிங் தான் சிறந்தவர்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை