ராகுல் டிராவிட் மீது விமர்சனத்தை முன்வைத்த டேனிஷ் கனேரியா!

Updated: Wed, Jul 06 2022 14:47 IST
Image Source: Google

இந்திய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 378 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 - 2 என இங்கிலாந்து அணி சமன் செய்தது.

இந்த போட்டியின் முதல் மூன்று நாட்களும் இந்திய அணியின் ஆதிக்கம் தான் செலுத்தியது. 4ஆவது நாள் பேட்டிங் மற்றும் 5ஆவது நாள் பந்துவீச்சு என இரண்டு நாட்களிலும் இந்திய அணி சொதப்பியது. இந்நிலையில் இந்தியாவின் இந்த சொதப்பலுக்கு என்ன காரணம் என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் டிராவிட் மீது பாகிஸ்தான் முன்னாள்வீரர் டேனிஷ் கனேரியா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் ப்ளேயிங் 11இல் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது தான் எனக்கு புரியவில்லை. டிராவிட் எடுத்த இந்த முடிவு மிகவும் தவறானது.

ஏற்கனவே இங்கிலாந்து மைதானங்களில் விளையாடிய நல்ல அனுபவம் கொண்ட டிராவிட் அந்த தன்மையை புரிந்துக் கொண்டு அஸ்வினை விளையாட வைத்திருக்க வேண்டும். ஆட்டத்தின் 3ஆம் நாளுக்கு பிறகு பந்து அதிக அளவு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. நல்ல டேர்ன் இருந்தது. அஸ்வின் மட்டும் இருந்திருந்தால் இங்கிலாந்தை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சவால்களை அஸ்வின் சந்தித்துள்ளார். அவர் இந்த போட்டியில் இருந்திருந்தால், நிச்சயம் சூழலை சமாளித்திருப்பார். நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை