கிரிக்கெட் வார்ணனையிலிருந்து ஓய்வை அறிவித்த டேவிட் லாயிட்!

Updated: Wed, Dec 22 2021 12:40 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் லாயிட். தற்போது 74 வயதாகும் லாயிட், இங்கிலாந்து அணிக்காக 9 டெஸ்டுகள், 8 ஒருநாள் ஆட்டங்களிலும் 407 முதல்தர ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணையாளராக 22 வருடங்கள் பணியாற்றி வந்தார். தன்னுடைய அற்புதமான வர்ணனையால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்த லாயிட், வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

பாப் வில்லிஸ் மறைவுக்குப் பிறகும் தன்னுடைய நண்பர்கள் டேவிட் கோவர், இயன் போத்தம், மைக்கேல் ஹோல்டிங் ஆகியோர் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றதாலும் வர்ணனைக் குழு அறையில் சற்று வெறுமையை உணர்வதாகவும், ஆகவே தானும் அவர்களைப் போல ஓய்வு பெற எண்ணியதாகவும் டேவிட் லாயிட் கூறியுள்ளார். 

ஸ்கை கிரிக்கெட் வர்ணனையாளர் குழுவில் மைக்கேல் ஆர்தர்டன், நாசிர் ஹுசைன், இயன் வார்ட், ராப் கீ போன்றோர் சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை