தென் ஆப்பிரிக்க அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள டேவிட் மில்லர்!

Updated: Fri, Nov 08 2024 11:41 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று (நவம்பர் 08) டர்பனில் நடைபெறவுள்ளது.

இதில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியோ ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இழந்த கையோடு இந்த டி20 தொடரை எதிர்கொள்ளவுள்ளது. மேற்கொண்டு இந்தாண்டு நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதிய இரு அணிகள் முதல் முறையாக மீண்டும் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

முன்னதாக இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் நட்சத்திர வீரர்கள் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சென் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்டோர் மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக மிகப்பெரும் சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

அந்தவகையில் இந்த தொடரில் டேவிட் மில்லர் 189 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனையை படைக்கவுள்ளார். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் குயின்டன் டி காக் 92 போட்டிகளில் விளையாடி 2584 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ள நிலையில், டேவிட் மில்லர் 122 போட்டிகளில் விளையாடி 2396 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

தென் ஆப்பிரிக்க டி20 அணி: ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், பேட்ரிக் க்ரூகர், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், மிஹ்லாலி மபோங்வானா, நகாபா பீட்டர், ரியான் ரிக்கல்டன், அண்டில் சிமெலேன், லூத்தோ சிபம்லா (3ஆவது மற்றும் 4ஆவது டி20), மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை