Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் 15ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

KKR vs SRH: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் -   ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம், கொல்கத்தா
  • நேரம் - ஏப்ரல் 03, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

KKR vs SRH Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 15 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 13 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 8 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 5 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 153 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 201 ரன்கள் உள்ளது. இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

KKR vs SRH: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

KKR vs SRH Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 28
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 19
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 09

KKR vs SRH Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- ஹென்ரிச் கிளாசென், குயின்டன் டி காக், இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட், அங்கிரிஷ் ரகுவன்ஷி, அனிகெத் வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன், அபிஷேக் சர்மா, நிதீஷ் ரெட்டி
  • பந்து வீச்சாளர்கள் - வருண் சக்ரவர்த்தி, பாட் கம்மின்ஸ்
Advertisement

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Probable Playing XI

Kolkata Knight Riders Probable Playing XI: குயின்டன் டி காக், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

இம்பேக்ட் வீரர் - மனீஷ் பாண்டே

Advertisement

Sunrisers Hyderabad Probable Playing XI: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், முகமது ஷமி, சிமர்ஜீத் சிங்.

இம்பேக்ட் வீரர் - ஆடம் ஸாம்பா

KKR vs SRH Dream11 Prediction, KKR vs SRH, KKR vs SRH Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, KKR vs SRH Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News