ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை 2ஆம் தேதி நடைபெற இருக்கும் 14ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியின் மூலம் ஆர்சிபி வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Advertisement

13000 டி20 ரன்கள்

அதன்படி இப்போட்டியில் விராட் கோலி மேற்கொண்டு 24 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் தனது 13ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்வார். இந்த மைல்கல்லை எட்டும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைக்கும் முதல் இந்தியர் மற்றும் உலகின் 5ஆவது வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி பெறுவார். அதுமட்டுமில்லால் டி20 கிரிக்கெட்டில் அதி வேகமமாக இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெறுவார். 

முன்னதாக இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 474 இன்னிங்ஸ்களில் 13ஆயிரம் ரன்களைக் கடந்ததே இரண்டாம் இடத்தில் உள்ளார். அதேசமயம் இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 381 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டி முதலிடத்தில் உள்ளார்.  வரை சாதனையாக இருந்து  வருகிறது. அதேசமயம் விராட் கோலி இதுவரை 384 இன்னிங்ஸ்களில் 41.58 என்ற சராசரியுடன் 12976 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டி20 போட்டிகளில் அதிவேகமாக 13000 ரன்கள் (இன்னிங்ஸ் வாரியாக)

  • கிறிஸ் கெய்ல் - 381 இன்னிங்ஸ்கள்
  • அலெக்ஸ் ஹேல்ஸ் - 474 இன்னிங்ஸ்
  • சோயிப் மாலிக் - 487 இன்னிங்ஸ்
  • கீரோன் போலார்டு - 594 இன்னிங்ஸ்
Advertisement

ரோஹித் சர்மாவை வீழ்த்த வாய்ப்பு.

இந்தப் போட்டியில் விராட் கோலி மேற்கொண்டு ஆறு சிக்ஸர்கள் அடித்தால், ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடிப்பார். இதுவரை விராட் கோலி ஐபிஎல் தொடரில் 276 சிக்ஸர்கள் அடித்துள்ளார், அதே நேரத்தில் ரோஹித் சர்மா 281 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள்

  • கிறிஸ் கெயில் - 357 சிக்ஸர்கள்
  • ரோஹித் சர்மா - 281 சிக்ஸர்கள்
  • விராட் கோலி - 276 சிக்ஸர்கள்
  • எம் எஸ் தோனி - 255 சிக்ஸர்கள்
  • ஏபிடி வில்லியர்ஸ் - 251 சிக்ஸர்கள்
Advertisement

நடப்பு சீசனில் விராட் கோலியின் செயல்திறன் இதுவரை சிறப்பாக உள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக, விராட் கோலி 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ரன்களையும், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக 30 பந்துகளில் 31 ரன்களையும் எடுத்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியிலும் அவர் தனது சிறப்பான ஃபார்மை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News