இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவின் சிக்ஸர் - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்றைய தினம் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அங்கிரிஷ் ரகுவன்ஷி 26 ரன்களையும், ரமந்தீப் சிங் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அறிமுக வீரர் அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா 13 ரன்களிலும், வில் ஜேக்ஸ் 16 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் ரிக்கெல்டன் 62 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரிலும் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அஷ்வானி குமார் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனது வழக்காமல ஷாட்கள் மூலம் சில சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதன்படி இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை ஆண்ட்ரே ரஸல் வீசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் ஆஃப் சைடுக்கு வெளியே இருந்த பந்தை டீப் ஃபைன் லெக்கை நோக்கி ஒரு அற்புதமான ஷாட்டை அடித்து அற்புதமான சிக்ஸரை அடித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதிலும் குறிப்பாக அவர் தனது பாணியிலான ‘சுப்லா’ ஷாட்டின் மூலம் தனது இன்னிங்ஸைத் தொடங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது. மேற்கொண்டு சூர்யகுமார் யாதவின் இந்த சிக்ஸர் குறித்த காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேசமயம் இப்போட்டியின் மூலம் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் தனது 8000 ரனக்ளையும் பூர்த்தி செய்து அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.