ஐபிஎல் 2025: வலை பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா; மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமின்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் சீசனானது இதுவரை சிறப்பானதாக அமையவில்லை.
ஏனெனில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அந்த அணி தற்சமயம் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளதுடன், தொடரின் ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த அணி இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த அணியின் இந்த நிலைக்கு ஜஸ்பிரித் பும்ராவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் பும்ரா, இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயத்தை சந்தித்திருந்த ஜஸ்பிரித் பும்ரா அதன்பின் காயம் தீவிரமடைந்ததன் காரணமாக, இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் அவர் விலகினார்.
இதனால் நடப்பு ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. மேற்கொண்டு அவர் தனது உடற்தகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் அவர் முழு உடற்தகுதியை எட்டாத காரணத்தால் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான அனுமதியை பிசிசிஐ தற்போது வரை வழங்காமால் இருந்து வருகிறது. இதனால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் இடம்பிடிப்பாரா என்ற கேள்விகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அந்தவகையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள ஜஸ்பிரித் பும்ரா தனது பந்துவீச்சு பயிற்சியை தொடங்கியுள்ளார். மேற்கொண்டு அவர் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளியும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர் கூடிய விரைவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஒருவேளை ஜஸ்பிரித் பும்ரா கூடிய விரைவில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையும் பட்சத்தில் அது அந்த அணிக்கு பெரும் பலமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. மேற்கொண்டு அவர் முழு உடற்தகுதியை எட்டினால் மட்டுமே எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இடம்பிடிப்பார் என்பதால், அவர் அதற்குள் முழு உடற்தகுதியை எட்டுவாரா என்ற ஏதிர்பார்ப்பும், ஆரவராமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான்*, வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.