ஐபிஎல் 20223: வார்னர், அக்ஸர், பாண்டிங், கங்குலி; பெரும் மாற்றத்துடன் டெல்லி கேப்பிட்டல்!

Updated: Thu, Mar 16 2023 12:00 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மாரச் 31ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாததால் இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானங்களில் விளையாடிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக ரசிகர் பட்டாளம் வைத்துள்ள அயல்நாட்டு வீரர் என்றால் அது டேவிட் வார்னர் தான். அவரின் டிக்டாக் காணொளிகளும், களத்தில் அவர் நேர்மையாக நடந்துக்கொள்வதற்குமென ரசிகர்களை தன்வசம் கவர்ந்து வைத்துள்ளார்.

இப்படிபட்ட வீரருக்கு தான் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர அமையவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 2016இல் முதல்முறையாக கோப்பையையும் வென்றுக்கொடுத்தார். ஆனால் கடந்தாண்டு அணி நிர்வாகத்திற்கும், வார்னருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு வெளிப்படையாக தெரிந்தது. குறிப்பாக கேப்டனாக இருந்தவர் என்றும் பாராமல் அவரை டக் அவுட்டில் கூட அமரவிடாமல் ஒதுக்கி வைத்தனர்.

இந்நிலையில் அதற்கெல்லாம் தரமான பதிலடி கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி தற்போது தான் உடல்நிலை முன்னேறி வருகிறது. எனவே அவரால் விளையாட முடியாது என்பதால் வார்னரை தேர்வு செய்துள்ளனர்.

இதனால் எந்த இடத்தில் வைத்து ஹைதராபாத் அணி அவமானப்படுத்தியதோ, அதே இடத்தில் வைத்து அந்த அணியை வீழ்த்தி காட்ட வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த அனுபவத்தை வைத்துள்ள வார்னர், ஐபிஎல்-லும் சிறப்பான கேப்டன்சியை செய்துள்ளார். எனவே இந்த முறை அவரின் தலைமையில் கோப்பையை வெல்வதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளன. 

அதேபோல் அணியின் துணைக்கேப்டனாக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் கலக்கிய அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி அணிக்கு கேப்டன்களே மிகச்சிறப்பாக உள்ள சூழலில் மற்றொருபுறம் பயிற்சியாளர் குழுவும் வேறல் லெவலில் அமைந்துள்ளது. ரிக்கிப் பாண்டிங் அளிக்கும் பயிற்சியில் கடந்த சில ஆண்டுகளாக டெல்லி அணி தொடர்ச்சியாக சாதித்து வருகிறது. தற்போது இவர்களுடன் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலியும் இணைந்துள்ளார். அணியின் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை