சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வார்னருக்கு வாய்ப்பில்லை - ஜார்ஜ் பெய்லி பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Mon, Jul 15 2024 15:52 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வாதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், அதற்கு முன்பு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பிற்கும் என சர்வதே ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் வார்னர் ஓய்வை அறிவித்திருந்தார். 

இந்நிலையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட டேவிட் வர்னர் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொட்ரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் வார்னர் விட்டுச்சென்ற இடத்தை அறிமுக வீர்ர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் நிரப்பவுள்ளார்.  

ஏனெனில் ஆஸ்திரேலியாவின் டி20 அணி மட்டுமின்றி, ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்த டேவிட் வார்னருக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்காக தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் இடம்பிடிக்க மாட்டார் என அந்த அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இதுகுறித்து பேசிய ஜார்ஜ் பெய்லி, “எங்கள் புரிதல் என்னவென்றால், டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதன்மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடம்பிடிக்க மாட்டார் என்பதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜார்ஜ் பெய்லி திட்டவட்டமாக கூறியுள்ளார். மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் இடத்தில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதன் மூலம், இனி வரும் போட்டிகளில் அவர்களுக்கு தான் அதிகபடியான வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை