சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் மாலன்!

Updated: Wed, Aug 28 2024 19:46 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியானது அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அணியின் சீனியர் வீரர்களான ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி உள்ளிட்டோர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இத்தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமானது வாய்ப்பு வழங்கியுள்ளது. 

அதேசமயம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட்டிற்கும் இத்தொடரில் இடம் கிடைக்கவில்லை. மேலும் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலனிற்கு இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.  இந்நிலையில் தொடர்ந்து இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வரும் டேவிட் மாலன் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

இங்கிலாந்து அணிக்காக கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகமான டேவிட் மாலன், இதுநாள் வரை 22 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 9 அரைசதங்களுடன் 1,074 ரன்களையும், 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதம், 7 அரைசதங்கள் என 1,450 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 62 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 16 அரைசதங்கள் என 1,892 ரன்களையும் சேர்த்துள்ளார். அதிலும் இதில் ஒருநாள் கிரிக்கெட்டில் 55.8 சராசரியையும், டி20 கிரிக்கெட்டில் 36.4 சராசாரியையும் வைத்துள்ளார். 

மேலும் ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தும் சாதனை படைத்த டேவிட் மாலன், கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் டேவிட் மாலன் மிகமுக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில் தற்சமயம் 37 வயதை எட்டியுள்ள டேவிட் மாலன் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ள நிகழ்வானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

இந்நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய டேவிட் மாலன், “நான் வளர்ந்ததற்கு டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் உதவியாக இருந்தது. சில சமயங்களில் நான் நன்றாக விளையாடினேன், ஆனால் இடையில் போதுமான அளவு அல்லது எனது பேட்டிங் ஃபார்ம் போதுமானதாக இல்லை, அது ஏமாற்றத்தை அளித்தது, ஏனென்றால் நான் அதை விட சிறந்த வீரராக உணர்ந்தேன். அதன்பின் நான் மீண்டும், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி என்மீதான விமர்சனங்களை மாற்றினேன். 

Also Read: Funding To Save Test Cricket

நான் மூன்று வடிவ கிரிக்கெட்டையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டேன், ஆனால் நான் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது அதிக தீவிரம் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். ஏனெனில் என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொள்வதுடன், எனக்கு பிடித்த ஷாட்டுகளையும் விளையாட முடியும். அனால் என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை