இப்போதும் எங்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் - டீன் எல்கர்!

Updated: Thu, Jan 04 2024 11:51 IST
இப்போதும் எங்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் - டீன் எல்கர்! (Image Source: Google)

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றியுள்ள அந்த அணி நேற்று கேப் டவுன் நகரில் தொடங்கிய 2ஆவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

ஆனால் இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாத அந்த அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் வேர்ரைன் 15 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 163 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர், லுங்கி இங்கிடி, ரபாடா தலா 3 விக்கெட்களை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 98 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 62/3 ரன்கள் எடுத்து இன்னும் 36 ரன்கள் பின்தங்கியுள்ளது.

அந்த அணிக்கு டீன் எல்கர் 12, டீ ஸோர்ஸி 7, ஸ்டப்ஸ் 1 ரன்னில் அவுட்டான நிலையில் களத்தில் ஐடன் மார்க்ரம் 36, பெட்டிங்ஹாம் 7 ரன்களுடன் உள்ளனர். தற்போதைய நிலைமையில் இந்தியா இன்னும் 36 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் மைதானம் பேட்டிங்க்கு சவாலாக இருப்பதை பயன்படுத்தி தென்னாப்பிரிக்காவை 150 – 200 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்யும் பச்சத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இந்த பிட்ச்சில் 100 ரன்களை இலக்காக வைத்தாலே தங்களால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என்று கேப்டன் டீன் எல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக 153/4 முதல் 153க்கு ஆல் அவுட்டாக்கியதை போல தங்களால் இப்போதும் சாதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “அனைத்து நாட்களிலும் 100 ரன்கள் வைத்தே எங்களால் வெற்றிக்கு போராட முடியும். குறிப்பாக எங்களுடைய பவுலர்கள் க்ளிக் ஆகும் பட்சத்தில் உலகின் எந்த பேட்டிங் வரிசையையும் இந்த பிட்ச்சில் தோற்கடிக்கும் திறமை இருக்கிறது. பிட்ச் என்னுடைய கண்களில் மிகவும் மோசமாக தெரியவில்லை. இப்போதும் நீங்கள் இந்தியா போல சரியான இடங்களில் பந்து வீசினால் கண்டிப்பாக சாதிக்க முடியும்” என்று கூறியுள்ளா. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை