ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 03ஆம் தேதி முதல் நடைபெறும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் , பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான குரூப் மற்றும் போட்டியை அட்டவணையை ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் முதல் இடம் பிடித்த இலங்கை அணியும் இடம்பிடித்துள்ளன. அதேபோல் குரூப் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் தகுதிச்சுற்றில் இரண்டாம் இடம் பிடித்த ஸ்காட்லாந்து அணியும் இடம்பிடித்துள்ளன.

Advertisement

இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு குரூப்பில் இடம்பிடித்துள்ளனர். அதன்படி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது அக்டோபர் 06ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி கோப்பையை நழுவவிட்டது. இதனால் இந்த முறை இந்திய அணி கோப்பையை வென்று சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் இத்தொடருக்காக மற்ற அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸும் தீவிர தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்நிலையில் அந்த அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் விதமாக தியான்ட்ரா டாட்டின் தனது ஓய்வு முடிவை திரும்பப்பேற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டாட்டின் கடந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

மேலும் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரரான தியான்ட்ரா டாட்டின், எதிர்வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை கணக்கில் கொண்டு அவர் தற்போது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். இவரது வருகையானது நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News