சமூக வலைதளதப்பதிவால் சர்ச்சையில் சிக்கிய வீரர்!
ஐபிஎல் தொடரின் 32ஆவது போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 ரன்களை குவிக்க அதற்கு அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 186 ரன்கள் என்ற இலக்கினை துரத்தி விளையாடிய போது 183 ரன்கள் குவித்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடம் விழுந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி அடைந்த தோல்வி பெரிதளவு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
அந்த வகையில் தற்போது பஞ்சாப் அணியின் வீரர் ஒருவர் ட்விட்டர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்போது சூதாட்ட சர்ச்சை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பஞ்சாப் அணியின் முன்னணி வீரர் தீபக் ஹூடா போட்டி ஆரம்பமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் ஹெல்மெட் அணியும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
இதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. அவரது இந்த செயல் பிசிசிஐ ஊழல் தடுப்பு விதிமுறைகளுக்கு எதிரானது. ஆட்டத்தில் விளையாடும் லெவனில் உள்ள வீரர்கள் யாரும் விளையாடுவதை உறுதி செய்யும் விதமாக இது போன்ற செயலை செய்யக் கூடாது என்று கூறி இருந்த வேளையில், அவர் இந்த புகைப்படத்தை பதிவிட்டது விதிமுறைகளுக்கு எதிரானது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
எனவே இவரது இந்த புகைப்படம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக பிசிசிஐ தடுப்பு குழு தற்போது சில நிர்வாகிகளை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் ஹூடா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.