IND-W vs SA-W, Match 10, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஏ.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி ஏற்கெனவ அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன், தென் ஆப்பிரிக்க அணி கடைசி போட்டியில் வெற்றி பெற்றதுடனும் இப்போட்டியில் விளையாடவுள்ளன. 

Advertisement

IND-W vs SA-W: Match Details

மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
இடம் - ஏ.சி.ஏ கிரிக்கெட் மைதானம், கொழும்பு
நேரம்- அக்டோபர் 09, மதியம் 3.0 மணி (இந்திய நேரப்படி)

IND-W vs SA-W: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

IND-W vs SA-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 33
  • India Women: 20
  • South Africa Women: 02
  • No Result: 01

IND-W vs SA-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 15 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 10 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 233 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 387 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IND-W vs SA-W: Possible XIs

Advertisement

India Women: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், சினே ராணா, ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட்

South Africa Women: டாஸ்மின் பிரிட்ஸ், லாரா வோல்வார்ட் (கேப்டன்), சுனே லூஸ், மரிசான் கேப், க்ளோ ட்ரையோன், சினாலோ ஜாஃப்டா, அன்னேக் போஷ், நாடின் டி க்ளெர்க், அயபோங்கா காக்கா, மசபடா கிளாஸ், நோன்குலுலேகோ மலாபா

IND-W vs SA-W: Player to Watch Out For

Probable Best Batter

Advertisement

டாஸ்மின் பிரிட்ஸ் கடந்த ஐந்து ஒருநாள் போட்டிகளில் நான்கு சதங்களை அடித்துள்ளார், மேலும் அவர் தனது வாழ்நாள் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை, ஸ்மிருதி மந்தனா கடந்த இரண்டு ஆட்டங்களில் சரியாக செயல்படவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.

Probable Best Bowler

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கிராந்தி கவுட் புதிய பந்தில் சிறப்பாக செயல்பட்டார். கடந்த ஆட்டத்தில் நோன்குலுலேகோ மிலாபா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

Advertisement

Today Match Prediction: தொடக்க வீரர்கள் தங்கள் திறமையை விட மோசமாக செயல்பட்டதால், இந்தியா இன்னும் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டதால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: LIVE Cricket Score

IND-W vs SA-W Prediction Match 10, ICC Womens World Cup 2025, Today Match IND-W vs SA-W, IND-W vs SA-W Prediction, IND-W vs SA-W Predicted XIs, Injury Update of the match between India Women vs South Africa Women

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News