ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு அட்வைஸ் வழங்கிய முகமது கஃப்!

Updated: Mon, Apr 24 2023 20:03 IST
Delhi Capitals Need To Rework Their Strategy In IPL 2023: Mohammad Kaif (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் மல்லுகட்டி வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்து முன்னேறுவதற்காக இன்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்த சீசனில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 4 அணிகளும் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளும் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகின்றன. முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய 3 அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடள்ஸ் அணி முதல் 5 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது.

இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆடாததால் டேவிட் வார்னர் கேப்டன்சி செய்கிறார். ரிஷப் பந்த் ஆடாததால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பலவீனமடைந்துள்ளது. ஓபனிங்கில் பிரித்வி ஷாவும் சரியாக ஆடுவதில்லை. 6 போட்டிகளில் வெறும் 47 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் பிரித்வி ஷா. மிட்செல் மார்ஷ், ஃபிலிப் சால்ட் ஆகியோரும் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை.  

சர்ஃபராஸ் கானை எடுத்தால் மிடில் ஆர்டர் பலப்படும். ஆனால் அவரை அணியில் எடுப்பதில்லை. டெல்லி கேபிடள்ஸ் அணி தோற்பது கூட பிரச்னையில்லை. ஆனால் அந்த அணி தோற்கும் விதம் கண்டிப்பாக அணி நிர்வாகத்திற்கு கவலையளிக்கும். பெரிய வித்தியாசத்தில் படுதோல்விகளை அடைந்துவருகின்றன. 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய முகமது கைஃப், “டெல்லி கேபிடள்ஸ் குறித்து பேசிய முகமது கைஃப்,   டெல்லி கேபிடள்ஸ் அணி ஆடும் லெவன் காம்பினேஷனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வலுவான ஆடும் லெவனை தேர்வு செய்து ஆடவைக்க வேண்டும். வியூகங்களிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். டெல்லி கேபிடள்ஸ் அணீயில் நிறைய பிரச்னைகள் உள்ளன. தொடர் தோல்விகளால் அந்த அணி வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். எனவே டெல்லி கேபிடள்ஸ் இதுவரை அடைந்த தோல்விகளை மறந்துவிட்டு, இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும்  ஜெயிப்பதை மட்டுமே மனதில்வைத்து அபாரமாக ஆட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை