எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகும் மிட்செல் ஸ்டார்க்; டெல்லி அணிக்கு பின்னடைவு!

Updated: Fri, May 16 2025 13:37 IST
Image Source: Google

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

மேற்கொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்களில் சிலர் சர்வதேச போட்டிகளின் காரணமாக இத்தொடரிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. 

மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பேசிய மிட்செல் ஸ்டார்க், இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளுக்கு இந்தியா வரமாட்டேன் என்று தெளிவுபடுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பானது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மோசமாகி வரும் நிலையில், தற்சமன் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் தொடரில் இருந்து விலகி இருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 இன்னிங்ஸ்களில் விளையாடிவுள்ள மிட்செல் ஸ்டார்க் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இரண்டு முறை ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். இப்படியான சூழலில் அவர் இல்லாதது டெல்லி கேப்பிட்டால்ஸ் அணியை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. ஏனெனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்விகள் என 13 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்ஸர் படேல் (கேப்டன்), ஃபஃப் டு பிளெஸ்சிஸ் (துணைக்கேப்டன்),கேஎல் ராகுல், முஷ்தஃபிசூர் ரஹ்மான், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை