டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு வார்னிங் கொடுத்த பிசிசிஐ; காரணம் இதுதான்!

Updated: Tue, Apr 04 2023 17:51 IST
Image Source: Google

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், கடந்த டிசம்பர் மாதம் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 18 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றனர்.

ஜனவரி மாதத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகி இருக்கிறார். ஆகையால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தற்காலிக கேப்டனாக டேவிட் வார்னர் இந்த சீசனில் நியமிக்கப்பட்டிருக்கிறார். டெல்லி அணி முதல் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொண்டு 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

அப்போட்டியின் நடுவே டக்-அவுட்டில் ரிஷப் பன்ட் ஜெர்சியை தொங்கவிட்டு கௌரவித்தார் ரிக்கி பாண்டிங். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது லீக் போட்டியை டெல்லி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இப்போட்டியின்போது டெல்லி அணியின் வீரர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக ரிஷப் படன்ட் ஜெர்சி நம்பரை(17) அணிந்தபடி விளையாடி கௌரவிப்பதாக இருந்தது.

இதை அறிந்து கொண்ட பிசிசிஐ, வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது. இது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து வெளிவந்த தகவலின் படி, “இது போன்ற கௌரவம் மற்றும் சமர்ப்பணங்கள், வீரருக்கு ஏதேனும் துயரம் நடந்துவிட்டாலோ அல்லது அவர் ஓய்வு பெற்றுவிட்டால் மட்டுமே செய்வர். ஆனால் ரிஷப் பந்த் நன்றாக குணமடைந்து வருகிறார். அவருக்கு இதுபோன்று செய்வது சரியல்ல. இதை போதுமானவரை தவிர்ப்பது சரியானதாக இருக்கும்.” என்று கூறியுள்ளனர்.

இதனால் ரிக்கி பாண்டிங் மற்றும் டெல்லி தரப்பினர் சற்று அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் அப்படி செய்வதை ரிக்கி பாண்டிங் தவிர்ப்பார் என்றும் தகவல்கள் வந்திருக்கிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை