தோனி குறித்து புவி கூறிய கருத்து - ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Updated: Wed, Jun 30 2021 22:47 IST
Dhoni is always there to guide youngsters: Bhuvneshwar Kumar (Image Source: Google)

ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி, இலங்கையில் சுற்றுபயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்றைய தினம் தனி விமானம் மூலம் இலங்கை சென்றடைந்தது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு பெறாத நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஒரு நேர்காணலின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி என புவனேஷ்வர்குமார் புகழ்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய புவனேஷ்வர்குமார், “அனைவருக்கும் தோனி ஒரு நல்ல விளையாட்டு வீரராக தெரியும். ஆனால் அவர் எதுபோன்ற மனிதர் என்பதை உணர்த்த தான் நான் பதிவிட்டேன். அவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவக்கூடியவர். நீங்கள் எந்த வீரர்களிடம் வேண்டுமானாலும் தோனி பற்றி கேட்கலாம். அனைவரும் அவரின் உதவும் மனப்பாண்மை குறித்து தான் சொல்வார்கள். அவர் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை