BAN vs SL: டி20 தொடரில் இருந்து விலகினார் குசால் பெரேரா; நிரோஷன் டிக்வெல்லவிற்கு வாய்ப்பு!

Updated: Fri, Mar 01 2024 21:43 IST
BAN vs SL: டி20 தொடரில் இருந்து விலகினார் குசால் பெரேரா; நிரோஷன் டிக்வெல்லவிற்கு வாய்ப்பு! (Image Source: Google)

இலங்கை அணி இம்மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்ட் டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவதாக இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது மார்ச் 04ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த ஆஃப்கானிஸ்தான் தொடரின் போது நடுவரை விமர்சித்தாக இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு ஐசிசி 3 கரும்புள்ளிகளை வழங்கியுள்ளது. மேலும் அவர் கடந்த 24 மாதங்களுக்குள் 5 கரும்புள்ளிகளைப் பெற்றுள்ளதால், ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. அந்த வகையில் நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கெதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் விளையாட வநிந்து ஹசரங்காவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இத்தொடரின் முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இத்தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த பதும் நிஷங்கா காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளதால் அவருக்கு மாற்று வீரராக அவிஷ்கா ஃபெர்ண்டோ இலங்கை டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் இத்தொடருக்கான டி20 அணியில் இடம்பிடித்திருந்த அனுபவ அதிரடி வீரர் குசால் பெரேரா, திடீரென ஏற்பட்ட சுவாச தொற்றின் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு மாற்றாக இடதுகை விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லவிற்கு மீண்டும் டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. 

முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின் இலங்கை டி20 அணியிலிருந்து நீக்கப்பட்ட டிக்வெல்ல, அதன்பின் 2022ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியிலிருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்காக இதுவரை 28 டி20 போட்டிகளி விளையாடி 18.5 என்ற சராசரியும் 480 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணி: வநிந்து ஹசரங்க (மூன்றாவது போட்டி), சரித் அசலங்கா(கேப்டன், முதலிரண்டு போட்டிகளுக்கு), அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனக, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, அகில தனஞ்சய, நுவான் துஷார, மதீஷா பத்திரனா, பினுர ஃபெர்னாண்டோ, ஜெப்ரி வான்டர்சே, தில்ஷன் மதுஷங்கா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை