ஓவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது - மிட்செல் சான்ட்னர்!

Updated: Sat, Feb 15 2025 09:26 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடின. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டி நேற்று கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 46 ரன்களையும், சல்மான் ஆகா 45 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல், டாம் லேதம் அரைசதம் கடந்து அசத்தினர். அவர்களுடன் டெவான் கான்வே 48 ரன்களையும், கேன் வில்லியம்சன் 38 ரன்களையும் சேர்க்க, இறுதியில், நியூசிலாந்து 45.2 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தனை வீழ்த்தியதுடன் முத்தரப்பு தொடரையும் வென்று அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர், “இப்போட்டியில் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தருவது நல்லது. மேலும் இந்த மைதானம் இருவேறு விதமாக செயல்பட தொடங்கியதால், எங்கள் பந்துவீச்சாளர்கள் ஒரே லைன் மற்றும் லெந்தில் பந்துவீச்சி எதிரணியை அழுத்ததில் வைத்திருக்க உதவியது.

Also Read: Funding To Save Test Cricket

ஏனெனில் வில்லியம் ஓருர்க் போன்ற பந்துவீச்சாளர் பந்தை ஸ்விங் செய்யும் போது அது பேட்டர்களுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்து. அவருடன் இணைந்த ஜேக்கப் டஃபியும் சிறந்த லைனின் பந்துவீசினார். அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டாம் லேதம் அரைசதம் அடித்திருப்பது அவர் மீதான அழுத்தத்தை குறைத்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் தங்கள் பங்களிப்பை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை