தனது ஆல் டைம் சிறந்த லெவனில் தேனியை சேர்க்காதது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம்!

Updated: Thu, Aug 22 2024 22:51 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டரான தினேஷ் கார்த்திக் சமீபத்தில் இந்திய அணியின் தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்திருந்தார். அதன்படி, தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக விரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். மேற்கொண்டு மூன்றாம் வரிசையில் ராகுல் டிராவிட்டையும், நான்காம் இடத்தில் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ள அவர், ஐந்தாம் இடத்தில் விராட் கோலியையும், ஆறாம் இடத்தியில் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கையும் தேர்வுசெய்துள்ளார். 

மேற்கொண்டு அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அனில் கும்ப்ளே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ள தினேஷ் கார்த்திக், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜாகீர் கானை தேர்வுசெய்ள்ளது. அதேசமயம் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ளர். மேற்கொண்டு அணியின் 12ஆவது வீரராக ஹர்பஜன் சிங்கை தேர்வுசெய்துள்ளார்.  அதேசமயம் இந்த அணியில் இந்திய அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளை பெற்றுக்கொடுத்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோருக்கு தினேஷ் கார்த்திக் தனது அணியில் இடம் கொடுக்கவில்லை.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த இந்த லெவனில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு யாரையும் தேர்வு செய்யாததுடன், அந்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரையும் சேர்க்காமல் விட்டது விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இந்நிலையில், அணியில் நான் விக்கெட் கீப்பரை தேர்வு செய்யவில்லை என்பது தனது தவறு என்றும், அணியை உருவாக்கும் போது விக்கெட் கீப்பரை சேர்க்க மறந்துவிட்டதாகவும் தினேஷ் கார்த்திக் விளக்காமளித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், "சகோதரர்களே, பெரிய தவறு நடந்தது, உண்மையில் அது என்னுடைய தவறுதான். அதனை நான் தற்போது தான் உணர்ந்தேன். நான் இந்த லெவனை உருவாக்கியபோது விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய மறந்துவிட்டேன். அதிர்ஷ்டவசமாக ராகுல் டிராவிட்டை நான் அணியில் சேர்த்ததன் காரணமாக, எல்லோரும் நான் அவரை விக்கெட் கீப்பராக தேர்வுசெய்துள்ளேன் என்று நினைத்தார்கள். மேலும் நான் ஒரு பகுதி நேர விக்கெட் கீப்பருடன் செல்கிறேன் என்றும் கூறுகின்றனர். ஆனால் நான் உண்மையில் ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பராக அந்த அணியில் சேர்க்கவில்லை.

விக்கெட் கீப்பராக இருந்த எனக்கு ஒரு விக்கெட் கீப்பர் இருப்பதை மறந்துவிட்டேன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது என்னுடைய தவறுதான். என்னைப் பொறுத்தவரை, தல தோனி இந்தியாவில் மட்டுமல்ல, எந்த வடிவத்திலும் ஒரு சிறந்த வீரர் என்பதை அறிவேன். அவர் இந்த விளையாட்டை விளையாடும் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். நான் அந்த அணியை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என்றால், நான் செய்யும் ஒரு மாற்றம் தல தோனியை 7ஆவது இடத்திற்கு தேர்வு செய்வதுடன், நான் தேர்வு செய்யும் அணியின் கேப்டனாகவும் அவர் இருப்பார்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த லெவன்: வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அனில் கும்ப்ளே, ஜஸ்பிரித் பும்ரா. ஜாகீர் கான். 12 வீரர் - ஹர்பஜன் சிங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை