இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று பார்லில் உள்ள போலண்ட் பார்க்கில் நடைபெற்ற எஸ்ஏ20 லீக் போட்டியின் மூலம் ஒரு சிறப்பு சாதனையைப் படைத்தார். டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில், பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியில் பங்காற்றினர்.

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் 22 ரன்களைச் சேர்த்ததன் மூலம், டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் எம்எஸ் தோனியை முந்தி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 391 போட்டிகளில் 342 இன்னிங்ஸ்களில் விளையாடி 7432 ரன்களைச் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்தில் இருந்தார்.

Advertisement

ஆனால் தற்சமயம் தினேஷ் கார்த்திக் 409 போட்டிகளில் 361 இன்னிங்ஸ்களில் விளையாடி 7,451 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த இந்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார். இப்போது இந்தப் பட்டியலில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தினேஷ் கார்த்திக்கு முன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி குறித்து பேசினால் பார்ல் ராயல்ஸ் அணி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. அதன்படி இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 55 ரன்களும், கேன் வில்லியம்சன் 36 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியில் ரூபின் ஹெர்மன் 51 பந்துகளில் 59 ரன்களும், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 29 பந்துகளில் 43 ரன்களும் எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பார்ல் ராயல்ஸ் அணி நடப்பு சீசன் எஸ்ஏ20 லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News