ஐபிஎல் 2024: ரோஹித் சர்மா சாதனையை சமன்செய்த தினேஷ் கார்த்திக்!

Updated: Tue, Mar 26 2024 12:35 IST
ஐபிஎல் 2024: ரோஹித் சர்மா சாதனையை சமன்செய்த தினேஷ் கார்த்திக்! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் டு பிளெசிஸ், மேக்ஸ்வெல், க்ரீன் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

ஆனாலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் அடித்ததுடன், 77 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.  இதனால் கடைசி மூன்று ஓவர்களில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 36 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது 18ஆவது ஓவரில் ஆர்சிபி அணி 13 ரன்களைச் சேர்க்க, கடைசி இரண்டு ஓவர்களுக்கு 23 ரன்கள் என்ற இலக்கு இருந்தது. அந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாச கடைசி ஓவரில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைக்கு ஆட்டம் சென்றதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பும் தொற்றிக்கொண்டது. 

அதன்பின் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து ஆர்சிபியின் வெற்றியும் உறுதியானது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கும் வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்துள்ளார். 

 

அதன்படி, 20ஆவது ஓவரில் 10 ரன்களுக்கு மேல் அடித்து அதிகமுறை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த வீரர்கள் வரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை தினேஷ் கார்த்திக் சமன்செய்துள்ளார். அதன்படி இருவரும் ஐபிஎல் தொடரில் 2 முறை 20ஆவது ஓவரில் 10 ரன்களுக்கு மேல் அடித்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர். இந்த பட்டியளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 08 முறை 20ஆவது ஓவரில் 10 ரன்களுக்கு மேல் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

 

மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ரன் சேஸில் அதிக முறை ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பிய வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அந்தவகையில் அவர் சேஸிங் போது 23முறை ஆட்டமிழக்காமல் பெவிலியனுக்கு திரும்பியதுடன், முன்னாள் விரர் யூசுப் பதானின் (22) சாதனையை முறியடித்துள்ளார். இப்பட்டியளில் சிஎஸ்கே அணியின் மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 27 இன்னிங்ஸ்களுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை