டெல்லியில் நேற்று நடைபெற்ற  சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. நடுவரிசை வீரர் அபினவ் மனோஹர் 46 ரன்களும் பிரவீண் டுபே 33 ரன்களும் எடுத்தார்கள். சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

Advertisement

அதன்பின் இலக்கைத் துரத்திய தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்த ஷாருக் கான் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

Advertisement

கடைசி 4 ஓவர்களில் தமிழக அணி வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் ஷாருக் கான் களமிறங்கியிருந்தார். அதனால் அணியைக் கரை சேர்க்க வேண்டிய மொத்தப் பொறுப்பும் அவரிடம் இருந்தது. தர்ஷன் வீசிய 17-வது ஓவரில் ஷாருக் கானும் சஞ்சய் யாதவும் 19 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் 18ஆவது ஓவரை வீசிய பிரதீக் ஜெயின் சஞ்சய் யாதவின் விக்கெட்டை வீழ்த்தியதோடு அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

அதனால் கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டன. 19ஆவது ஓவரின் முதல் 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கடைசி 7 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டன. கடைசிப் பந்தில் ஷாருக் கான் சிக்ஸர் அடித்ததால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தில் சாய் கிஷோர் ஒரு பவுண்டரி அடித்தார். 

ஜெயின் இரு வைட் பந்துகளை வீசினார். இதனால் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான அந்தத் தருணத்தில் அற்புதமான சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியை வழங்கினார் அதிரடி வீரர் ஷாருக் கான்.

தமிழக அணி கடந்த வருடம் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றபோது கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக், இந்த வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

 

Also Read: T20 World Cup 2021

தினேஷ் கார்த்திக்கின் பதிவில், “இறுதிச்சுற்று இரு தமிழக வீரர்களுக்கு உரித்தானது. பந்தில் சாய் கிஷோர், பேட்டிங்கில் ஷாருக் கான். தமிழக அணி கடைசியில் ஜெயிக்கும்போது இரு வீரர்களுக்கும் ஆடுகளத்தில் இருந்தது பொருத்தமானது. இந்திய அணியின் கதவை இருவரும் பலமாகத் தட்டுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News